இடுகைகள்

Magic Stone 19

படம்
  மந்திரக்கல் 19       “ இதில் யசோவை எதுக்கு இழுக்கிற ” தெரிந்து கொண்டே கேட்டான் பரசு.      “ இழுக்கிறேன், ஏன்னா அவ அண்ணனா அவ சந்தோஷமான வாழ்க்கையைப் பத்தின பயம் எனக்கு இருக்கு. நீ இப்படி ரத்னா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா அவளோட நிலைமை என்ன ” உரிமையாய் கோபம் காட்டினான் சாஸ்தா.      “ நான் எப்படிப் போனா என்ன. என்னோட நிலைமை எதுக்காக அவளை பாதிக்குமுன்னு நினைக்கிற ” நண்பன் மனம் புரிந்தும் புரியாதது போல் நடந்துகொண்டான்.      “ ஓகோ, நான் என்ன கேட்க வரேன்னு சாருக்குப் புரியல அப்படித் தானே " கேட்டவன் குரலில் அத்தனை நக்கல்.      “ இங்க பார் சாஸ்தா, யசோ மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. போன ஜென்மத்தில் அவ என் பொண்டாட்டியா இருந்திருக்கலாம். அதுக்காக, இப்பவும் அப்படியே நடக்கணுமுன்னு அவசியம் இல்லையே " என்க,      “ நான் சொன்னதை வைச்சு என்னை மடக்க ட்ரை பண்றியா ? இது உனக்கான காலம் அதனால நீ சொல்ற எல்லாத்தையும் நான் அமைதியா கேட்டுக்கிறேன். எனக்குன்னு ஒரு காலம் வர ,  ரொம்ப நாள் ஆகாது டா, அப்ப உனக்