Magic Stone 12


 

மந்திரக்கல் 12

      யசோவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அடுத்த ஒரு நொடி கூட காத்திருக்க முடியாமல் வேகமாக அவளுடைய அறை வரை வந்துவிட்டவன் அதன் பிறகே மணியைப் பார்த்தான். இரவு இரண்டு மணி பதினோரு நிமிடம்.

     நல்லவேளை சுதாரிச்சேன். இப்ப போய் அவ ரூம் கதவைத் தட்டி இருந்தேன், மகராசி செருப்பாலே அடிச்சிருப்பா. காலையில் பேசலாம் தான், ஆனா அதுவரைக்கும் ஆர்வத்தை அடக்கிட்டு அமைதியா இருக்க முடியாதே என்னால்என்ன செய்யலாம் எனப் பரசு யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், சற்றே வேகமாக அடித்த காற்றில் யசோ தங்கியிருந்த அறையின் கதவு கிரீச் என்ற சத்தத்துடன் திறந்து உள்ளே மெல்லிய வெளிச்சம் இருப்பதை படம் போட்டுக் காட்டியது.

     போகலாமா வேண்டாமாஎன முன்னொரு கால் பின்னொரு கால் என்று இரண்டு நிமிடம் குழம்பியவன் பின், “துணிஞ்சு போயிடலாம்என மனதைத் திடப்படுத்திக் கொண்டு அறைக்கதவை இன்னும் சற்றே அகலமாகத் திறந்தான்.

     அந்த இடைவெளி பால்கனியின் மின்விளக்கு வெளிச்சத்தில் நிலவை ரசித்துக் கொண்டிருந்த பெண்ணிலவைக் காட்டியது பரசுவிற்கு.

     "இந்த நேரத்தில் பால்கனியில் என்ன பண்றா. ஒருவேளை திருட்டு தம் அடிப்பாளோ. இருக்கும் இருக்கும் சாஸ்தா தங்கச்சி தானே, இதெல்லாம் பண்ணாம போனா தான் ஆச்சர்யம்நினைத்துக்கொண்டு அறைக்குள் பூனை நடையிட்டவன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த திலோவைப் பார்த்தான்.

     "ஐயோ என் தங்கச்சி தான் எவ்வளவு அழகு, அழகான கரடிக்குட்டி மாதிரி இருக்காபார்வையில் பாசமாய் வருடிவிட்டு பால்கனி நோக்கிச் சென்றான்.

     யசோ அருகில் செல்லச் செல்ல உடல் லேசாக நடுங்கியது. “பத்து பேர் ஒரே நேரத்தில் எதிர்த்து வந்தா கூட என்னால சமாளிக்க முடியும். ஆனால் இவளை நினைச்சா உடம்பெல்லாம் தானா நடுங்குது. செல்லத்தா, பொன்னாத்தா எல்லா ஆத்தாவும் எனக்குத் துணையா இருங்கஎன்கிற வேண்டுதலுடன் அவளை அழைக்க இவன் வாயைத் திறந்த  நேரத்தில்,

     வாங்க பரசு ஏன் இவ்வளவு லேட். நீங்க வருவீங்கன்னு நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்றதுஎன்று சொல்லி மொத்தமாக பரசுவை திகைக்கச் செய்தாள் யசோ.

     என்னது நான் இங்க வருவேன்னு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாளா? சகுனமே சரியில்லையே, ஒருவேளை இவளுக்கு நான் தான் இமயன்னு தெரிஞ்சு இருக்குமா?

     ஏதோ விபரீதம் நடக்கப் போகுதுன்னு பட்சி சொல்லுதே. பேசாம ஓடிடலாமா, எதுவா இருந்தாலும் காலையில் சாஸ்தாவையும் கூட வைச்சிக்கிட்டு பேசுறது பெட்டர்பலவாறாகத் தனக்குள் நினைத்தவன் திரும்பிச் செல்ல முயன்றான்.

     எங்க போறீங்க பரசு, இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் தேடி வந்திட்ட பின்னால், என்னைத் தனியா விட்டுட்டுப் போக உங்களுக்கு எப்படி மனசு வருது. இவ்வளவு நேரம் கழிச்சு இப்ப தான் என்னைப் பார்க்கவே வந்திருக்கீங்க. வந்துட்டுப்  பேசாமலே போறீங்களே, இதெல்லாம் நல்லாவா இருக்குஅநியாயத்திற்குச் சிணுங்குபவளைப் பார்க்க பயம் வந்தது பரசுவிற்கு.

     கண்டிப்பா ஏதோ பெரிய விஷயம் இருக்கு பரசு, மனசை இரும்பாக்கிக்கோ” எனத் தனக்குள் கவுண்ட்டர் கொடுத்துக்கொண்டிருந்தான்.

     சிரமப்பட்டு மரியாதை கொடுத்துப் பேசினால் இவன் இப்படி சிலை போல் நின்று எனக்குள் இருக்கும் பொறுமை அனைத்தையும் காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைக்கிறானே என்னும் கடுப்பில், “ஹலோ அதென்ன எப்ப என்னைப் பார்த்தாலும் காணாததைக் கண்ட மாதிரி பேன்னு வாயைப் பொழந்துக்கிட்டு பார்க்கிறீங்க. பொண்ணுக்குத் தெரியாம ஒழுங்கா சைட் அடிக்கக் கூட வக்கில்லை உங்களுக்கும் உன் ப்ரண்டு அந்தத் தருதலைக்கும்" வழக்கமான பாணியில் இறங்கினாள்.

     என்னது நான் சைட் அடிச்சேனா அதுவும் இவளையா? என்னடா நடக்குது இங்க. நானே என்னடா எப்பவும் கருப்பா இருக்கும் காக்கா இன்னைக்கு வெள்ளையா சுத்துதேன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். அது புரியாம வந்துட்டா பெரிய இவ மாதிரிபுரியாமல் பார்த்தான் பரசு.

     நீங்க சரியான லூசு மாங்கா, அவன் ஒரு காஞ்ச மிளகாய். நீங்க பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்க்கிற மாதிரி என்னைப் பார்த்தா, அந்தக் கிரியேச்சர் வடையைத் திருட காத்துக்கிட்டு கிடக்கிற காக்கா மாதிரி திலோவைப்  பார்க்கிறான். செட்டு சேர்ந்திருக்கிறதுங்க பாருங்க, ஓணானும் உடும்பும்" மானவாரியாக கலாய்க்கத் துவங்கினாள் யசோ.

     அடேய் சாஸ்தா உன்னால் என் மானம் மரியாதை எல்லாம் போச்சு டா. நீ என் தங்கச்சியை சைட் அடிச்ச சரி, நான் எப்ப இவளை சைட் அடிச்சேன்மனதிற்குள்ளே நண்பனைக் கழுவி ஊற்றினான் பரசு.

     "கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம இன்னும் எவ்வளவு நேரத்துக்குத் தான் என்னையே பார்த்துட்டு இருக்கப் போறதா உத்தேசம்" என்க, அதன்பிறகே நடப்பிற்கு வந்தவன்,  என்ன கேள்விஎன்றான்.

      "உங்க ப்ரண்டு அந்தப் புண்ணியவானுக்கு விடிஞ்ச இந்த பிறந்தநாள். எந்த வருஷமும் இல்லாத திருநாளா அந்த எருமை பிறந்த நல்லநாளை நல்லாக் கொண்டாடணுமுன்னு சும்மா இருந்த எனக்குப் போன் பண்ணி சொரிஞ்சுவிட்டு, இங்க வர வைச்சுட்டு இப்ப அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே.

     நீங்க கூப்பிட்டதுக்காக தலைக்கு மேலே இருந்த வேலை எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வந்து இருக்கேன்என்க, அதன்பிறகே இந்த விஷயம் நினைவு வந்தது பரசுவிற்கு.

     இதுநாள் வரை என்னோட ஒரு பிறந்தநாளுக்குக் கூட அந்தக் காண்டாமிருகம் நேரில் வந்து வாழ்த்து சொன்னது  கிடையாது. எப்ப பார்த்தாலும் அந்த பாழாப்போன ஆபீஸே கதின்னு கிடப்பான்.

     நியாயமாப் பார்த்தா நீங்க என்னைக் கூப்பிட்ட நேரம். அந்த வளர்ந்த மாட்டுக்கு பிறந்தநாள் ஒரு கேடுன்னு வர மறுத்திருக்கணும். என்ன பண்றது கூடப்பிறந்த பாசம் அவனுக்கு இல்லாமல் இருக்கலாம். அனா எனக்கு இருந்து தொலைக்கிதேஅதிரடி சரவெடியாய் அவள் வெடிக்க, பரசு தன்னையும் அறியாமல் இரசித்துப் பின் மெதுவாகப் புன்னகைத்தான்.

     இங்க என்ன வடிவேல் கமெடியா ஓடிக்கிட்டு இருக்கு சிரிக்கிறீங்கஅவள் அதற்கும் கோபம் கொள்ள, “உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த வாயாடித்தனம் தான். எப்பவும் யாருக்காகவும் உன்னை நீ மாத்திக்காதஆத்மார்த்தமாய் சொன்னான் பரசு.

     இப்ப என்ன சொன்னீங்க, உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? இது எப்ப இருந்து நடந்தது" ஆச்சர்யமாகக் கேட்டாள் யசோ.

     ஏன் எனக்கெல்லாம் உன்னைப் பிடிக்கக் கூடாதா? இல்லை அதுக்கும் உன்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா? அப்படிப் பெர்மிஷன் வாங்கணுமுன்னா சொல்லிடு, முன்கூட்டியே ஏகப்பட்ட பெர்மிஷன் வாங்கிப் போட்டுடுறேன். எதிர்காலத்துல ரொம்பத் தேவைப்படும்விளையாட்டாய் அவன் சொன்ன வார்த்தைகள் யசோவிற்குள் உண்டாக்கிய உணர்வுகளை அவள் மட்டுமே அறிவாள். கன்னங்கள் சிவப்பேற, கண்கள் தானாய் நிலம் நோக்கியது.

     ஹே என்னாச்சு, ம் ஜஸ்ட் கிட்டிங். நீ எதையும் பெருசு படுத்திக்காததலை குனிந்த அவள் தோற்றம் கண்டு பதறி பரசு பரபரக்க, பஞ்சர் ஆன டயரிலிருந்து வெளியேறிய காற்று போல புஸ் என்று ஆனது அவளுக்கு

     நெருங்கி வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்தவள், “இங்க பாருங்க, இதுநாள் வரை எதுவுமே செய்யாம எனக்குள்ள மொத்தமா ஆசையை விதைச்சுட்டீங்க. இந்த அழகில் இப்படியெல்லாம் காக்கா பிடிக்க ட்ரை பண்ணா, என்னால் பல்லைக் கடிச்சுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிடுவேன். அதுக்கு அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாதுகண்கள் சிவக்க அவள் சொல்லி முடிக்க, ஒன்றும் புரியவில்லை பரசுவிற்கு.

     பேயறைந்தது போல் இருந்த அவன் முகத்தைப் பார்த்ததும் சத்தமாய்ச் சிரித்தவள், “எப்படி உங்களுக்கு மட்டும் தான் விளையாடத் தெரியுமா எங்களுக்கும் தெரியும்என்க, பரசுவின் முகத்தில் வந்த நிம்மதியை லோடு லோடாக லாரியில் அள்ளிவிடலாம்.

     ஹே கூல் கூல் ரொம்ப டென்சன் பண்ணிட்டேனா? ஸ்சாரி பா ஸ்சாரி, இப்ப சொல்லுங்க. சாஸ்தா பிறந்தநாளை எப்படி செலிப்பரேட் பண்ணலாம். முக்கியமான விஷயம் எந்த ஹோட்டலில் டின்னர் அரேன்ஜ் பண்ணி இருக்கீங்கவிஷயத்திற்கு வந்தாள்.

     யசோ என்னவோ தன் போக்கிற்கு வரிசையாக  கேள்விகளைக் கேட்டுவிட்டாள். பரசுவால் தான் பதில் சொல்ல முடியவில்லை. அவன் தான் சாஸ்தாவின் பிறந்தநாளை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டானே. இரண்டு நாள்கள் முன்பு வரை சாஸ்தாவைத் தவிர வேறு எதுவும் அவன் நினைவில் இல்லை. அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்பதற்காகத் தான் அவன் நேபாளம் வந்ததே. ஆனால் அடுத்தடுத்து நடந்த காரியங்கள் அவன் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்க, தானாக நண்பனின் பிறந்தநாள் மறந்து விட்டிருந்தது.

     நான் அவன் பிறந்தநாளையும், உன்னை இங்க வரச்சொன்னதையும் சேர்த்து மறந்துட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவ யசோ" தயங்கிக்கொண்டே தான் கேட்டான் பரசு.

     அடப்பாவமே, உங்களையும் உயிர்த்தோழன்னு சொல்லிக்கிட்டு திரியுறான் அவன்நக்கலடிக்க, “நான் யாருன்னு அவனுக்குத் தெரியும், அவன் யாருன்னு எனக்குத் தெரியும். எங்களில் யாரைப் பத்தியும் யாருக்கும் யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லைசற்று பெருமையாகவே சொன்னான் பரசு.

     பெருமையோடு எருமை மேய்க்க நினைக்கிறது எல்லாம் சரிதான், இப்ப என்னோட சந்தேகத்துக்குப் பதில் சொல்லுங்க.  உங்களோட அதிகபட்ச நினைப்பே அவன் தான். அவனையே மறந்து இருக்கீங்கன்னா, அந்த அளவுக்கு வேற யாரோ ஒருத்தர் உங்க வாழ்க்கைக்குள்ள வந்து இருக்காங்க யார் அதுபுருவங்களை உயர்த்திக்கேட்டாள்.

     மண்டு, உன் கற்பனைக் குதிரையை  கண்டபடி அவிழ்த்துவிடாதே.  இங்க தொழிலில் நடந்த பிரச்சனையில் நான் அவன் பிறந்தநாளை மறந்தது என்னவோ உண்மை தான். அதுக்காக அவனை விட முக்கியமான ஒருத்தர் வந்துட்டதா அர்த்தம் இல்லை. அப்படி ஒருத்தர் எப்பவும் வரவும் முடியாது அது யாரா இருந்தாலும் சரிஉறுதியாகச் சொன்னான்.

     டைலாக் எல்லாம் நல்லா தான் பேசுறீங்க. ஆனா உங்க ப்ரண்டு பிறந்தநாளுக்கு எதுவும் பண்ண மாதிரி தெரியலையே" என்க, “இப்ப வரைக்கும் பண்ணலன்னா என்ன, விடியுறதுக்கு இன்னும் மூணு மணி நேரத்துக்கு மேல இருக்கே. அதுக்குள்ள தேவையான ஏற்பாட்டை பண்ணிடலாம்" ஆர்வமானான் பரசு.

     நீங்க ஒருத்தர் தனியா எப்படி பண்ணுவீங்க, கூடவே டெக்கரேஷனுக்குத் தேவையான எல்லாம் வாங்கியாச்சா" என்க, பேய் முழி முழித்தான் பரசு.

     இங்க இப்படி ஏதாவது நடக்குமுன்னு தெரிஞ்சு தான் நானே எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன். எடுத்துத் தரேன் வேலையை ஆரம்பிங்கஎன்றாள்.

     ஆரம்பிங்க இல்ல செல்லம், ஆரம்பிப்போம். நீயும் என்கூட இறங்கி வேலை செய்யப்போறபரசு சொல்ல, “நான் எதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்" என்றாள் கோபம், வருத்தம், எரிச்சல் கலந்த குரலில். அவளுடைய கவலையான உணர்வுக்கு என்ன காரணம் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

     ஹலோ காலையில் நாம எந்த எருமைமாட்டுக்கு பிறந்தநாள் கொண்டாடப் போறோமோ அந்த எருமைமாடு கூடப் பிறந்த இன்னொரு எருமைக் கன்னுக்குட்டி நீ. அவனுக்காக இதைக் கூட செய்ய மாட்டியா என்ன?” என்க, முறைப்பாகத்  தன் அறைக்குள் சென்று தேவையான பொருள்களை எடுத்து வந்தாள்.

     டேய் உனக்கு இருக்குடா ஒருநாளுதிடீரென மரியாதை காற்றில் பறக்கவும் ஜெர்க்கான பரசு, “ஹலோ என்ன கட்டின புருஷனைக் கூப்பிடுற மாதிரி  அதிகாரம் தூள் பறக்கிது" என்றான் சிரிப்போடு.

     நான் அப்படித்தான்டா கூப்பிடுவேன் என்டா பண்ணுவ டாவேண்டுமென்றே செய்தாள். “ஏய் குட்டச்சி என் நெஞ்சு வரைக்கும் தான் இருக்க, இப்படியே பேசிக்கிட்டு இருந்த மண்டையில் கொட்டி கொட்டி உன்னை இன்னும் குள்ளமாக்கிடுவேன்" என்றான்.

     யாருடா குட்டச்சி நீ தான் நெட்டக்கொக்கு கழுதை" அன்றைய மதிய நேரம் சாஸ்தாவுக்கு என்ன மாதிரியான அர்ச்சனை விழுந்ததோ சற்றும் மாறாமல் பரசுவுக்கும் கிடைத்தது. பாரபட்சம் பார்க்காமல் தாறுமாறாகத் திட்டினாள்.

     யாரைப் பார்த்துடி கழுதைன்னு சொல்ற. நீ ஒரு கழுதை, உன் அண்ணன் ஒரு கழுதை. அவனும் நீயும் கட்டிக்கப்போறவங்க இரண்டு கழுதைங்கஎன்றுவிட்டு தான் சொல்லியதை நினைத்துத் தானே சிரித்தான் பரசு.

     இப்படி இரண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருந்தீங்கன்னா பிறந்தநாளே முடிஞ்சிடும் பரவாயில்லையா?” என்கிற குரல் கேட்டு இருவரும் திரும்ப அங்கே திலோ நின்றிருந்தாள்.

     என்னப்பா நீங்க, நானும் வந்ததில் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். கேஜி ஸ்டூடண்ட்ஸ் மாதிரி சண்டை போடுறீங்கதிலோ கேட்க, அவளைப் பார்த்து சிரித்து சமாளித்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது மட்டும் முறைத்துக் கொண்டனர்.

     "இது சரிப்பட்டு வராது. அண்ணா நீங்க போய் பலூன் ஊதுங்க. யசோதா நீ உங்க அண்ணனோட போட்டோஸ் லேமினேட் பண்ணி கொண்டு வந்தியே அதை எடு. நீயும், நானுமா சேர்ந்து ஹாலை டெக்கரேட் பண்ணலாம். ஆளுக்கொரு வேலையாச் செய்தால் சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்திலோ யோசனை சொல்ல மளமளவென்று வேலைகள் நடந்து முடிந்தது.

     மணி காலை ஆறு எனக் காட்ட த்ரீ, டு, ஒன் என்று கத்திக்கொண்டே ஒருவாளித் தண்ணீரை நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தா சாஸ்தாவின் மீது ஊற்றினான் பரசு.

     ஐயோ சுனாமி, பரசு, யசோ, திலோ மூணு பேரும் ஓடிப்போங்க சுனாமி சுனாமிபாதி உறக்கத்தில் எழுந்து கத்திக் கொண்டிருந்த நண்பன் தலையில் தட்டி அமைதிப்படுத்தினான் பரசு.

     திலோ அவனை விசித்திரமாகப் பார்க்க, “அது ஒன்னும் இல்லம்மா, ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீர்னு எழுப்பினா இப்படித்தான் வியர்டா ஏதாவது உளறுவான். நீ அதைப் பெருசு படுத்தாதஎன்றான்.

     அப்படியா, எனிவேஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாஸ்தாயாரும் எதிர் பாராமல் முதல் வாழ்த்தைத் தான் சொல்லி இருந்தாள் திலோத்தமா.

     இத்தனை வருடங்களில் சாஸ்தாவிற்கு முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல பரசு மற்றும் யசோ இருவருக்கும் இடையே கடும் போட்டி நிகழும். பரசு திட்டம் போட்டு நண்பனைத் தன்னோடு தங்க வைத்துக் கொண்டால், சரியாக இரவு பதினோறு மணி ஐம்பத்து ஐந்து நிமிடத்திற்கு போன் செய்து முதல் வாழ்த்தைச் சொல்லிவிடுவாள் யசோ. அதற்குப் பதிலுக்குப் பதில் செய்யும் விதமாக அந்த நாள் முழுவதும் சாஸ்தாவைத் தன்னுடனே வைத்துக்கொள்வான் பரசு.

     இத்தனை வருடங்களாக பரசு எப்படி எப்படியோ முயற்சித்துப் பார்த்தும், யசோ தான் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தாள். இந்த வருடம் அசால்ட்டாக திலோ யசோவை முந்திவிட்டாள்.

     யசோ, பரசு இருவருக்கும் இது பேரதிர்ச்சியாக இருக்க சாஸ்தாவோ ஈஈஈ என்று பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தான். “ஓகே யூ கெய்ஸ் கேரி ஆன். நான் ரூமில் இருக்கேன்அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு தான் விலகிச் சென்றாள்.

     சரி திலோஎன்று அவள் உருவம் கண்ணை விட்டு மறையும் வரை வெளிப்படையாக சைட் அடித்த சாஸ்தா திரும்ப, பரசு யசோ இருவரும் தாங்கள் அணிந்திருந்த சட்டையில் முழுக்கையை அரைக்கையாய் இழுத்துவிட்டுக் கொண்டிருந்தனர்.

     என்னடா இரண்டு பேரும் அப்படிப் பார்க்கிறீங்க, என்ன டா முறைக்கிறீங்கா. புரிஞ்சு போச்சு ஆரம்பிங்கஎன்று சாஸ்தா குனிந்து கொள்ள, இருவரும் அவன் முதுகில் பாலடி தோலடி விளையாடுவது போல் வெளுத்து வாங்கிவிட்டனர்.

     அதிகாலை நேரத்தில் பேக்கிரி காரனைத் தொந்தரவு செய்து வாங்கி வந்த கேக் வெட்டுப்பட்டு அநாதையாகக் கிடக்க, அதைக் கண்டுகொள்ளாமல் கலர் பொடி பூசி விளையாடுவது, மறைத்து வைத்திருந்த தண்ணீர் பலூன் உடைத்து விளையாடுவது, செல்பி எடுப்பது என அமர்க்களமாய் ஆரம்பித்தது அந்த நாள். எவ்வளவு சொல்லியும் கேளாமல் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபட மறுத்து தனியே நின்று மகிழ்வாக வேடிக்கை பார்த்தாள் திலோத்தமா.

     நேபாளத்திலே மிகவும் அழகான ஒரு ரெஸ்ட்டாரண்ட்டில் அந்த நாட்டின் பாரம்பரிய உணவு, தேவி சீதையின் ஆலயத்தில் ஒரு அர்ச்சனை, மிருகக்காட்சி சாலையில் யசோ சாஸ்தாவின் உறவினர்களுடன் ஒரு சந்திப்பு, வீட்டிற்கு அருகே உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் அந்த நாள் இரவை நெருங்கியது.

     பௌர்ணமி நிலவு ஒளியில் வீட்டிற்கு வெளியே மண்தரையில் ஒற்றை போர்வை விரிப்பில் காலையும், மதியமும் உண்ட உணவு செரிக்க குளிர்பானம் மற்றும் குளு குளு கூழ் அருந்திக் கொண்டிருந்தனர் அனைவரும்.

     "திலோ இன்னைக்கு புல் டே எங்க கூட இருந்திருக்க, எங்களோட ட்ரிப் உனக்குப் பிடிச்சிருந்ததாபேச்சை ஆரம்பித்தாள் யசோ.

     ரொம்பப் பிடிச்சிருந்தது யசோ ஒரு கேம் விளையாடினா நாள் சந்தோஷமா முடிவுக்கு வந்திடும்என்றாள்.

     கண்ணாம்பூச்சி விளையாடுவோம் எனக்கு ரொம்பப் புடிக்கும்பரசு சொன்ன நேரம், “எனக்கும் அது ரொம்பப் புடிக்கும்பட்டென்று சொன்னாள் திலோத்தமா.

     ஆனா கண்ணைக் கட்டிக்க இங்க ஒன்னும் இல்லையேயசோ சொல்லி முடிப்பதற்குள் அவள் கழுத்தில் கிடந்த ஸ்டோலை உறுவினான் பரசு.

     கடுப்பில் அவள் வாயைத் திறக்கும் முன்னர்,நான் இந்த விளையாட்டில் எக்ஸ்போர்ட். எப்படி எல்லாரையும் கண்டுபுடிக்கிறேன் பாருங்கஎன்று பெருமை பாடியவன் தனக்குத் தானே கண்ணைக் கட்டிக் கொண்டான்.

     அவனுக்குக் கண் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நன்றாக நான்கு சுற்று சுற்றி விட்டவர்கள் அவனைச் சீண்டிவிட்டுக் கொண்டே முடிந்த மட்டும் அவன் கைகளுக்குள் அகப்படாமல் ஓடினர்.

     நண்பர்களைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மெதுவாக நகர்ந்து வந்த பரசு, அவன் மற்றும் சாஸ்தா இருவரையும் ஒரு வழியாக்கிய அந்தப் பள்ளத்தின் அருகே வந்தான்.

     ஹே பரசுஎன்று ஓடிவந்து நண்பனைப் பிடித்துக்கொண்ட சாஸ்தா படபடவென்று கண் கட்டை அவிழ்த்துவிட்டான்.

     அப்போது, “விழிமறை வஸ்திரம் விலகும் நேரம் புதையல் கிட்டும். அப்புதையல் தம் வாழ்வின் திசைகாட்டும்என்ற ரத்னாவின் வார்த்தைகள் காதிற்குள் ஒலித்தது பரசுவிற்கு.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1