Magic Stone 14


 

மந்திரக்கல் 14

     ரத்னாஉயிர் உருகும் குரலில் அழைத்துக்கொண்டு சிலையாக நிற்கும் பெண்ணைக் கட்டியணைத்தான் பரசு.

     உயிர் இருந்தும் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத அந்தச் சிலை, உயிரும் உணர்வும் கலந்த பரசுவை குற்றவுணர்வு என்னும் உளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்தது என்றே சொல்ல வேண்டும்.

     கடவுளே உனக்குக் கொஞ்சம் கூட கருணையே இல்லையா. அழகு சிலையா இருந்தவளை இப்படிக் கருங்கல் சிலையா மாத்திட்டியே. ஏன் இப்படி எல்லாம் நடந்துச்சு.

     உன் கட்டளையை மீறி ஒருவிஷயம் நடந்து, அதுக்கு அப்புறம் நீ தண்டிப்பதற்குப் பதில் அப்படி ஒரு பிரச்சனை நடக்காமலேயே தடுத்திருக்கலாமே. அந்தச் சக்தி கூட இல்லாத நீயெல்லாம் என்ன கடவுள்கடவுளைத் திட்டி முடித்தவன், முன்ஜென்ம மனைவியிடம் வந்தான்.

     ஏன் இப்படிப் பண்ண ரத்னா. உன்னைப் பொண்டாட்டியா நினைக்காத, கால் தூசியாக் கூட மதிக்காத ஒருத்தனுக்காக உன் வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே ஏன். அப்பா, அம்மா கூடப்பிறந்த தங்கை, உயிருக்கு உயிரான தோழன், நான் கட்டிக்காப்பாத்த வேண்டிய நாடு, நாட்டு மக்கள் எல்லாத்துக்கும் மேல என்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுங்கன்னு யாருக்குமே நான் சரியானவனா நடந்துக்கல. அப்படிப்பட்ட ஒருத்தனைக் காப்பாத்த எதுக்கு இப்படிப் பண்ணகத்திக் கதறி அழுதான்.

     பரசு, என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிக்கிட்டு இருக்க. வா வீட்டுக்குப் போகலாம்நண்பனின் பின்னால் வந்த யுவா, சிலையைக் கட்டிப்பிடித்து அழும் நண்பனைப் பார்த்து பயந்து போய் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல முற்பட்டான்.

     ரத்னா டாசிலையைக் கை நீட்டி அழுகையுடன் சொன்னான் பரசு.

     “ரத்னான்னா” யுவா புரியாமல் கேட்க,“போன ஜென்மத்தில் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பாவத்துக்காக என்னைக் காப்பாத்துறேன்னு இப்படி உயிருள்ள சிலையாகிப் போய் நிக்கிறா“ என்றான்.

     பைத்தியம் மாதிரி உளறாத, நீ சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இது ஒரு சாதாரண சிலை அவ்வளவு தான்" பொறுமை இழந்து கத்தினான் யுவா.

     இது சிலை இல்ல யுவா. என் பொண்டாட்டி ரத்னாஎன்று இன்னும் இறுக்கமாக சிலையைக் கட்டிக்கொண்டவன், “எனக்காகவே வாழ்ந்து, எனக்காக பலதரப்பட்ட கஷ்டத்தையும், அவமானத்தையும் சந்திச்சு, எனக்காகவே இப்படி சிலையா மாறிப் போய் நிக்கிறா டாஅழுகையோடு சொன்னான்.

     சரி இது ரத்னாவாவே இருக்கட்டும், வா முதலில் வீட்டுக்குப் போகலாம். தூங்கி எழுந்திரி காலையில் எல்லாம் சரி ஆகிடும்" நண்பனின் வழிக்கே செல்லப் பார்த்தான் யுவா.

     இல்லை யுவா இனி எனக்குத் தூக்கம் கிடையாது. இத்தனை வருஷமா என் ரத்னா பட்ட கஷ்டம் எல்லாம் போதும். அவளோட சாபத்தில் இருந்து அவளை விடுவிக்கணும், நான் விடுவிப்பேன். அது வரைக்கும் எனக்கு நிம்மதியே கிடையாது. இப்பவே அதைத் தேடிக் கிளம்புறேன், எதனால என்னோட ரத்னா இப்படிக் கல்லா மாறினாளோ அதை வைச்சே என்னோட ரத்னாவை நான் பழையபடி மாத்துறேன்என்று கிளம்ப முற்பட்டவனைத் தடுத்தான் யுவா.

     எங்கடா போற"

     தேடப் போறேன்"

     எதை"

     என் அப்பா, அம்மா, சொல்லிக் கொடுத்த குரு, என் கூடப்பிறந்த தங்கச்சி, நான் கட்டிக்கிட்ட பொண்டாட்டிங்க என்னோட நெருக்கமான நண்பர்கள், என்னை அவங்க குலதெய்வமா நினைச்ச என் நாட்டு பிரஜைகள் எல்லாத்தையும் விட நான் எதைப் பெருசா நினைச்சேனோ, எதை உருவாக்க என் ஆயுளில் பாதியை நான் செலவளிச்சேனோ, எதனால நான் செத்தேனோ, எதை வைச்சு என் ரத்னா எனக்கு உயிர் கொடுத்து அவ சிலையானாளோ அதைத் தேடப் போறேன்" மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசினான்.

     அதான் எதுடாயுவாவிற்குப் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

     மந்திரக்கற்கள்உணர்ச்சிப் பெருக்கோடு பரசு சொன்ன அடுத்த நொடி பளார் என்று ஒரு அறை விழுந்தது யுவாவிடம் இருந்து. பரசு நண்பனைத் தீப்பார்வை பார்க்க இவனும் சற்றும் சீற்றம் குறையாமல் அவனைப் பார்த்தான்.

     இந்த அறையை ஆராய்ச்சின்னு நீ வீட்டை விட்டு வெளியே போன அன்னைக்கு அடிச்சிருக்கணும். அப்படிச் செய்திருந்தால் நீ இன்னைக்கு இப்படி ஆகி இருக்க மாட்ட. ஒழுங்கா என்கூட வா, நாளைக்கு காலையில் இந்தியா கிளம்புறோம். ஓரு சைக்கார்டிர்ஸ்ட் கிட்ட போறோம், எல்லாம் சரியாகிடும். அதுக்கு அப்புறமாவது ஒழுங்கா இரு" சொன்னவன் யுவா.

     எனக்குப் பைத்தியம் பிடிச்சு இருக்குன்னு நினைக்கிறியா?” கசப்பான புன்னகையோடு கேட்டான் பரசு.

     ஆமாடா உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு, பைத்தியமே தான்.  உன்னைச் சொல்லிக் குத்தமில்லை. உன்கூடவே ஒட்டிக்கிட்டி திரியுறானே அந்த சாஸ்தா, அவனைச் சொல்லணும்.  நீ தான் நல்லது கெட்டது புரியாம தான் தோன்றித்தனமாச் சுத்திக்கிட்டு இருக்கன்னா பொறுப்பா இருக்கிற அவனாச்சும் உனக்குப் புத்தி சொல்லி இருக்கணுமா இல்லையா?  

     நான் அவன் இடத்தில் இருந்து, நீ என் பேச்சைக் கேட்காம போய் இருந்தேன்னு வைச்சிக்க, உன் காலை உடைச்சி வீட்டுக்குள்ள பூட்டி வைச்சிருப்பேன். இப்படி ஊர் ஊரா சுத்த விட்டு பிரச்சனையை இவ்வளவு முத்த விட்டு இருக்க மாட்டேன்கோபத்தின் உச்சியில் பேசினான் யுவா.

     என்ன மல்லா உனக்கும் விட்ட குறை தொட்ட குறை துரத்துதாதானும் ஆவேசம் குறையாமல் கேட்டான் பரசு.

     என்ன சொன்ன, என்னை என்ன சொல்லி கூப்பிட்ட பதற்றமானான் யுவா. பரசு சொன்ன அந்தப் பெயர் அவனை ஏதோ செய்தது.

     மல்லன், மாமல்லன். நிடத நாட்டு இளவரசி சேதுக்கரசி மேல ஆசைப்பட்டு, அவளை அடையப் படாதபாடு பட்டு, கடைசியில் அவளை உதயகுமாரன் கிட்ட விட்டுக்கொடுத்தவன். உன் காதலைப் பறிச்ச அவனைப் பழிவாங்கவும் முடியாம, மன்னிச்சு விடவும் முடியாம, கடைசி வரை அவனுக்காகவே வாழ்ந்து முடிச்சவன். அதை அத்தனை சீக்கிரத்தில் மறந்துட்டியா மல்லா" பரசு கேட்ட நொடி யுவாவிற்கும் மூளைக்குள் மின்னல் வெட்டுவது போல் தலை வலிக்கத் துவங்கியது.

     புகைப்படம் எடுக்கும் போது வெளிப்படும் வெளிச்சம் போல் கண்ணைக் கூசச் செய்யும் அளவு ஏதோதோ நினைவுகள் வந்து போக, அந்தப் பாரம் தாங்காமல்  தலையைக் கைகளால் தாங்கிக்கொண்டு தள்ளாட ஆரம்பித்தான்.

     பரசு, சாஸ்தாவிற்கு கூட இன்னமும் கதையாக மட்டுமே தெரிந்த முன்ஜென்ம நினைவுகள் யுவாவிற்கு முதல்முதலாக வரத் துவங்கியது. யுவாவின் நினைவில் முதலில் வந்ததே இளவரசி சேதுக்கரசியும், அவளுடைய கணவன் உதயகுமாரனும் தான். அவர்களே இந்த ஜென்மத்தில் திலோத்தமா, சாஸ்தா.

     பாதிக்கு மேல் நினைவுகள் வர மறுக்க குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான் யுவா. நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு இப்பவாச்சும் புரியுதா யுவா, நான் போகணும் என்னைப் போக விடு" என்றான்.

     இல்லை எனக்கு ஏதோ தப்பாப்படுது. நீ போக நினைக்கிற பாதை ரொம்ப ஆபத்தானது, உன்னை நான் அனுப்பக் கூடாதுன்னு என் உள்மனசு சொல்லுதுநண்பனைத் டுத்தான் யுவா.

     அப்பப்ப உனக்கு எதிர்காலக்காட்சிகள் வருமுன்னு சொல்லுவியே, இதுவும் போன ஜென்மத்தோட தொடர்ச்சி தான். காலங்காலமா உன் வம்சத்துக்கு அந்தக் கடவுள் கொடுத்த வரம் என்க, நடக்கும் எதையும் நம்பவும் முடியவில்லை அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை யுவராஜாவால்.

     முற்பிறவி, உயிருள்ள சிலை, மறுஜென்மம் இதில் எல்லாம் இன்னும் முழுசா நம்பிக்கை வரல. ஆனா நான் உன்னை முழுசா நம்புறேன் பரசு. தீர்க்கமா ஒரு முடிவு எடுத்து எங்கேயோ பயணம் கிளம்புற, நான் தடுத்தாலும் நீ பின்வாங்கப் போறது இல்லன்னு தெரிஞ்சிடுச்சு. அதுனால்  நீ எங்க போறதா இருந்தாலும் என்னையும் கூட கூட்டிக்கிட்டு போ" அழுத்தமாகச் சொன்னான்.

     நான் போற பாதை எங்க போய் முடியுமுன்னு எனக்கே தெரியாது. சொல்லப் போனா அந்தப் பாதைக்கு முடிவு இருக்கான்னு கூடத் தெரியல. இப்ப நான் போறேன் திரும்ப வந்தா என் ரத்னாவுக்கான விமோச்சனத்தோட வருவேன். இல்லையா அந்த கடவுள்கிட்ட போயிடுவேன்" சொன்ன பரசுவின் குரலில் அத்தனை உறுதி.

     ஏன்டாதவிப்புடன் கேட்டான் யுவா.

     நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடாது டா. எனக்கு நம்பிக்கை இருக்கு, அவ்வளவு சீக்கிரம் என் உயிர் இந்த உடம்பை விட்டுப் போயிடாது. கனவில் மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கிற ரத்னாவோட முகத்தை நேரில் ஒரு முறையாச்சும் பார்க்காம இந்தக் கண்கள் மூடாது.

     ரத்னாவை பழைய நிலைமைக்கு கொண்டு வரத்தான் என்னோட இந்த ஜென்மமே. அப்படி இருக்க பிறந்த கடனைத் தீர்க்காம காலன் எப்படி என் கணக்கை முடிப்பான்“ தீர்மானமாகக் கேட்ட பரசுவிற்க யுவாவால் என்ன பதில் சொல்லிவிட முடியும்.

     “கடந்த காலம் எல்லோருக்கும் ரொம்ப நல்லகாலமா இருக்கிறது கிடையாது.  எனக்குத் தெரிய வந்த நம்மளோட முழு முன்ஜென்ம வரலாறு என்னைக்கும் உங்க யாருக்கும் முழுசா நினைவு வரக்கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.

     சாஸ்தாகிட்ட இதைப் பத்தி சொல்லாத. ஏற்கனவே என்னையும், என் தொழிலையும் பார்த்துக்கிறேன்னு அவனோட வீட்டை விட்டு ஒதுங்கி இருக்கான். நான் போகப் போறது ஆபத்தான பயணமுன்னு தெரிஞ்சா, கண்டிப்பா அவனும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என் பின்னாடி வந்திடுவான். அது யாருக்குமே நல்லது இல்ல“ என்க, யுவா ஏக்கமாய் பார்த்தான். அந்தப் பார்வையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.

     அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் திலோத்தமா என்னோட தங்கச்சி, உள்ள இருக்கா. அவளைப் பார்த்த உடனே உனக்கு விட்ட குறை, தொட்ட குறையா ஏதாவது ஈர்ப்பு வரலாம். அது உன் தப்பு இல்லை, ஆனா அதை வளர விடாதே. அது யாருக்கும் நல்லது இல்ல, திலோ சாஸ்தாவுக்கானவதான் இல்லாத நேரத்தில் அடுத்தடுத்து செய்ய வேண்டியதைச் சொல்லிக்கொண்டிருந்தான் பரசு.

     அவனை அழுத்தமாகப் பார்த்த யுவா, உன் காதலி ரத்னாவை திரும்ப உயிரோட கொண்டு வரத்தான் நீ இந்த ஜென்மம் எடுத்திருக்கன்னு சொல்ற, அது உண்மையாவே இருக்கட்டும். அதுக்கு நீ மட்டும் பிறந்திருந்தா போதுமே, அந்த ஜென்மத்தில் உன் கூட இருந்த நாங்க எல்லோரும் ஏன் மறுபடியும் பிறக்கணும்“ யுவாவின் கேள்வியில் ரத்னாவின் சிலையைத் பாதுகாப்பான இடத்தில் வைக்க நினைத்து இப்போது இருக்கும் இடத்தில் இருந்து தூக்க முயற்சித்த பரசுவின் கைகள் வேலை நிறுத்தம் செய்தது.

     எங்க யாருக்கும் எந்த ஞாபகமும் வராம போயிருந்தா நீ சொல்றது எல்லாமே கட்டுக்கதைன்னு ஒரு மனசா முடிவுக்கு வந்து இருப்போம். ஆனா எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வருதே, அதுக்கு என்ன அர்த்தம். எனக்கென்னவோ நாம எல்லோரும் ஒரே நோக்கத்துக்காக தான் மறுபடியும் பிறந்திருக்கோமுன்னு தோணுதுகேள்வியும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்ன யுவாவின் வார்த்தைகள் பரசுவைச் சற்றே சிந்திக்க வைத்தது.

     பரசு யோசிப்பதைக் கவனித்து, கொஞ்சம் பொறுமையா இரு. எல்லோரும் ஒன்னு சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.  நாம எல்லாருமா சேர்ந்து நீ சொன்ன அந்த மந்திரக்கற்களைத் தேடிக் கண்டுபுடிப்போம்யுவா நம்பிக்கையாய் சொல்ல, பரசு தன் நண்பர்களை உயிராபத்தில் நிறுத்தத் தயங்கினான்.

     தயங்காத டா, நீ தனி ஒருத்தனா அதைக் கண்டுபிடிக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு உனக்குத் தெரியும். நான் சொல்றதை ஒத்துக்கோ என்க, மனசில்லாமல் ஒப்புக்கொண்டான் பரசு.

     ரத்னாவின் சிலையைத் தூக்கிக்கொண்டு தன்னறைக்கு வந்தவன் சிலையை கபோர்டின் உள்ளே ஒளித்து வைத்து, அதன் மீது பெட்கவரை போர்த்தி விட்டு கபோர்டைப் பூட்டி சாவியை தன்னுடன் பத்திரப்படுத்திக் கொண்டான்.

     யுவாவுடன் வரவேற்பறை வந்தவன் தன்னந்தனியாக உறங்கும் சாஸ்தாவை எழுப்ப மனமில்லாமல் அறைக்குள் சென்று அமர்ந்து விடியலுக்காக காத்திருந்தான். யசோதா நடுவில் எழுந்து திலோவின் அருகே சென்று படுத்துக்கொண்டாள்.

     அடுத்த நாள் காலை, சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்த சாஸ்தா தன் முன்னே பயங்கர யோசனையுடன் அமர்ந்திருந்த யுவாவைத் தான் முதலில் பார்த்தான்.

     ஹேய் யுவா எப்படா வந்த, ரொம்ப சர்ப்பரைஸா இருக்கு. நேத்தே வந்துட்டியா? வந்ததும் நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லைன்னு எழுப்பி இருக்கலாமே" என்க,ஆமா அப்படியே எழுப்பினா மட்டும் நீ எழுந்துட்டு தான் மறுவேலை பார்ப்ப. தூங்குறதுக்கு போட்டி போட்டா அந்த கும்பகர்ணன் கூட உன்கிட்ட தோத்துடுவான்என்றபடி வந்தாள் யசோ.

     ஹாய் யசோ எப்படி இருக்கயோசனை கலைந்து விசாரித்தான் யுவா.

     நல்லா இருக்கேன் என்னடா தேளோட ஒரு கொடுக்கு தான் இருக்கு, இன்னொன்னை காணுமுன்னு நினைச்சேன் வந்திடுச்சு. வெல்கம் டூ நேபால்கிண்டலாக வரவேற்றாள்.

     யசோ என் போன் சார்ஜரைப் பார்த்தியா?” என்றவாறு அறையில் இருந்து திலோ வெளியே வர, அவளைப் பார்த்த யுவாவிற்கு உடலெங்கும் பட்டாம்பூச்சி பறந்தது. நீண்டநெடுங்காலம் முன்பு தொலைந்து போன பொருள் ஒன்று மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆட்டிப்படைத்தது.

     திலோ என்கிட்ட பவர்பேங்க் இருக்கு அதில் சார்ஜ் போட்டுக்கிறியா?” கேட்டுக்கொண்டே யுவாவிற்கும் திலோவிற்கும் நடுவில் வந்து நின்றான் சாஸ்தா. அவன் என்னவோ சாதாரணமாகத் தான் வந்தான். ஆனால்  அந்தக்கணம் யுவாவிற்கு சாஸ்தாவின் மீது கோவம் கோவமாக வந்தது.

     இல்லை பரவாயில்லை வேண்டாம்மென்மையாய் மறுத்தவள் தன்னையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த யுவாவின் பார்வை வீச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அறைக்குள் செல்லப் பார்த்தாள் திலோ.

     ஏன்டா பாசமலரே ரொம்ப நேரமா உன்னோட ப்ரண்டு ஏதோ யோசனையில் சோகமா  உட்கார்ந்து  இருக்காரே என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா?” யசோ கேட்ட பிறகே, திறந்திருந்த அறைக்குள் மெத்தையில் சோகமே உருவாக அமர்ந்திருந்த பரசுவைக் கண்டான் சாஸ்தா.

     தீவிர யோசனை ஓடும் அவனுடைய முகத்தை வைத்தே பிரச்சனை பெரிது என்று உணர்ந்தவனாக, ”பரசு என்னாச்சு உனக்கு, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கஎன்று நண்பனை உலுக்கினான் சாஸ்தா.

     பாஸ்தா ச்சே சாஸ்தா, நாம கிளம்பணும் இன்னைக்கே. நமக்கு ரொம்பப் பெரிய கடமை இருக்குபடபடப்பாய் சொன்னான் பரசு.

     போலாம் டா எத்தனை மணிக்கு கிளம்பணும், போற இடத்தில் எத்தனை நாள் தங்கணுமுன்னு சொல்லு. அதுக்கு ஏத்த மாதிரி நான் ரெடியாகுறேன்பட்டென்று பதில் வந்தது சாஸ்தாவிடம் இருந்து.

     ஹலோ ஹலோ அதென்ன எந்த இடம், எதுக்காக போறோம் அப்படின்னு எந்தக் கேள்வியும் கேட்காம அவர் கேட்டதும் சரி கிளம்பலாமுன்னு சொல்ற. அவரு காடு மேடுன்னு சுத்துறவரு. இந்தத் தடவை துணைக்கு நீயும் வான்னு சொன்னா உடனே மண்டையை ஆட்டிட்டு கிளம்பிடுவியா?

     நீ ஏசி ரூமிலே இருந்து பழகினவன். உன்னால தொடர்ந்து ஒருமணி நேரம் கூட நடக்க முடியாது. எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் உன்னால பசியையோ, காயங்களையோ பொறுத்துக்க முடியாது. இதெல்லாம் உனக்கு ஞாபகத்தில் இருக்கா இல்லையா?” துளிர்விட்ட கோபத்துடன் கேட்டாள் யசோதா.

     ஏய் என்ன வாய் ரொம்ப நீளுது. நான் உன் அண்ணன் என்னைப் பத்தி என்ன வேணாலும் பேசுற உரிமை உனக்கு இருக்கு. ஆனா இவனைப் பத்தி பேசுற அருகதையோ இல்லை தகுதியோ உனக்குக் கிடையாது“ என்க, “ஆமா இவர் தர்ம மகாராஜா, இவரைப் பத்தி பேசினா என்னை அப்படியே கழுமரத்தில் ஏத்திடுவாங்க. அடப் போங்கப்பா“ நொடித்துக்கொண்டாள்.

     நானும் நீயும் இன்னைக்கு நல்ல துணி உடுத்துறதுக்கே இவன் தான் காரணம். இதை விட நம்ம நிலைமையை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்சாஸ்தா சொல்ல யசோ அதற்குப் பதில் பேச என அந்த இடம் சில நிமிடங்களில் சொற்போர் நடக்கும் இடம் போல் மாறியது.

     நடப்பதைப் பொறுக்க முடியாமல், “கொஞ்சம் நிறுத்துறீங்களா இரண்டு பேரும். நாம இன்னைக்கே இந்தியா கிளம்பப் போறோம். டெல்லியில் இருந்து சென்னை போய் சேர்ந்திட்ட பிறகு, நாளைக்கே தென்காசிக்கு கிளம்புறோம்அவ்வளவு நேரம் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் சொல்லி முடித்தான் பரசு.

     ஹலோ என்ன எங்களையும் கூட்டு சேர்க்கிறீங்க. என்னால எல்லாம் உங்க கூட வர முடியாதுஎன்ற யசோவை எரிக்கும் கண்களில் பார்த்தவன், நீ வர நம்ம ஐந்து பேருக்கும் டிக்கெட் எப்போவோ போட்டாச்சுஎன்றுவிட்டு அறைக்குள் செல்பவனை வித்தியாசமாகப் பார்த்தனர் அனைவரும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1